- திருவனந்தபுரம்
- பொன்னானி மாஜிஸ்திரேட் நீ
- சமாஜ்வாடி
- சுஜித் தாஸ்
- டிஎஸ்பி
- பதானம்திடா மாவட்டம்
- கேரளா
- சுஜித்
- கேரள மாநிலம்
திருவனந்தபுரம்: கேரளாவில் இளம்பெண் பலாத்கார புகாரில் பத்தனம்திட்டா மாவட்ட முன்னாள் எஸ்பி சுஜித் தாஸ் மற்றும் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய பொன்னானி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்ட எஸ்பியாக இருந்தவர் சுஜித் தாஸ். இவர் மலப்புரம் மாவட்ட எஸ்பியாக இருந்தபோது ஒரு புகார் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று கூறி தனது வீட்டுக்கு வந்து மிரட்டி பலாத்காரம் செய்ததாக இளம்பெண் ஒருவர் பொன்னானி போலீசில் புகார் செய்தார். மேலும் திரூர் டிஎஸ்பி பென்னி, பொன்னானி இன்ஸ்பெக்டர் வினோத் ஆகியோரும் தன்னை பலாத்காரம் செய்ததாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து 3 அதிகாரிகளும் சமீபத்தில் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்தநிலையில் தன்னுடைய புகாரில் போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி பாதிக்கப்பட்ட இளம்பெண், கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க பொன்னானி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. இதையடுத்து எஸ்பி சுஜித் தாஸ், டிஎஸ்பி பென்னி, இன்ஸ்பெக்டர் வினோத் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீசுக்கு பொன்னானி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post இளம்பெண் பலாத்கார புகார் எஸ்பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.