×
Saravana Stores

ஐபிஎல் தொடரின் வெற்றி தோல்வி கணக்கு

ஐபிஎல் தொடரில் இதுவரை 63லீக் ஆட்டங்கள் நடந்துள்ளன. அதில் சில அபார வெற்றியும், ெதாடர் வெற்றிகளும் உள்ளன. கூடவே பரிதாப தோல்வியும், விரட்டிய தோல்விகளும் அணி வகுக்கின்றன. அவற்றில் பல முடிவுகள் விரக்தி, வேதனைகளுக்கு இடையில் வித்தியாசமானவை, விமர்சனங்களுக்கு உள்ளானவை.
* டெல்லிக்கு எதிரான 16வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா 106ரன் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்தது. அதே ெகால்கத்தா 36வது லீக் ஆட்டத்தில் 1ரன் வித்தியாசத்தில் பெங்களூரிடம் வெற்றியை கைப்பற்றியது. கூடவே 46வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் 1ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வென்றது.
* ஐதராபாத் அணி 57வது லீக் ஆட்டத்தில் லக்னோவை 10 விக்கெட் வீழ்த்தி அபார வெற்றியை வசப்படுத்தியது. எதிரணி வசைப்பாடலுக்கு உள்ளானது.
8 ஒரு ஆட்டத்தில் வென்றாலே பிளே ஆப் உறுதி என்ற நிலையில், ராஜஸ்தான் தொடர்ந்து 3 ஆட்டங்களில் ஹாட்ரிக் தோல்வி என ஆச்சர்யப்படுத்துகிறது. கூடவே சென்னைக்கு எதிரான தோல்வி கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.
* ராஜஸ்தானைப் போலவே, குஜராத், மும்பை அணியும் தலா ஒரு ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ளன. கூடவே மும்பை, பஞ்சாப் தொடர்ந்து தலா 4 தோல்விகளை கண்டுள்ளன. மொத்ததில் ‘டபுள் ஹாட்ரிக்’ தோல்விகளை கண்ட ஒரே அணியாக பெங்களூர் இருக்கிறது. அந்த அணி தொடர்ந்து 6 ஆட்டங்களில் தோல்வியை பார்த்திருக்கிறது.
* அதே நேரத்தில் தெடர்ந்து அதிக வெற்றிகளை ருசித்த அணியாக பெங்களூர் அணி இருக்கிறது. அந்த அணி இப்போது தொடர்ந்து 5 வெற்றிகளை வசப்படுத்திய அணியாக உள்ளது. மேலும் ராஜஸ்தான் தலா 2 முறையும், கொல்கத்தா, ஐதராபாத் தலா ஒருமுறையும் 4வெற்றிகளை கைப்பற்றி உள்ளன. தலா ஒரு ஹாட்ரிக் வெற்றி பெற்ற அணிகளாக கொல்கத்தா, லக்னோ ஆகியவை உள்ளன.
* தொடர்ந்து 5 வெற்றிகளை(2009, 2011, 2016) பெற்றத் தொடர்களில் எல்லாம் பெங்களூர் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி உள்ளது. ஆனால் 2வது இடம்தான ்கிடைத்துள்ளது.
* இந்த தொடரில் அதிக ரன் குவித்த அணிகள் பட்டியலில் ஐதராபாத் 277 (மும்பை) 272 (பெங்களூர்) ரன் குவித்து முதல் 2 இடங்களில் உள்ளது. கொல்கத்தா 266 (டெல்லி)ரன் குவித்து 3வது இடத்தில் இருக்கிறது.
* அதிக ரன்னை இலக்காக கொண்டு விரட்டி வென்ற அணிகளின் பட்டியலில் பஞ்சாப் முதல் இடத்தில் இருக்கிறது. அந்த அணி கொல்கத்தா அணி நிர்ணயித்த 261ரன்னை 18.4ஓவரிலேயே கடந்து 262 ரன் எடுத்தது. கூடவே 8 விக்கெட் வித்தியாசத்திலும் அபார வெற்றியை பதம் பார்த்தது. மற்றொரு ஆட்டத்தில் ஐதராபாத் குவித்த 287 ரன்னை விரட்டிய பெங்களூர் அணியும் 262 ரன் விளாசி, 25ரன் வித்தியாசத்தில் தோற்றது.
* அணியில் வீரர் ஒருவர் சதம் விளாசியும் அவரது அணி தோற்ற சம்பவங்கள் ஐபிஎல் தொடரில் பலமுறை நடந்துள்ளன. இந்த தொடரில் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் சதம் விளாசியும், லக்னோ அணியிடம் தோற்றது.
ஐபிஎல் தொடர்களில் கோஹ்லி 3 முறையும், ஹாசிம் அம்லா, சஞ்சு சாம்சன், ருதுராஜ் ஆகியோர் தலா 2 முறை சதம் விளாசியும் அவர்களது அணிகள் தோல்வியைதான் சநதித்துள்ளன. அதிலும் ருதுராஜ் இதுவரை சதம் விளாசிய 2 ஆட்டங்களிலும் சென்னை தோற்றது.

The post ஐபிஎல் தொடரின் வெற்றி தோல்வி கணக்கு appeared first on Dinakaran.

Tags : IPL Series ,IPL ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் தொடரிலும் ரத்து செய்ய ரோகித்,...