×

சில்லி பாய்ன்ட்…

* பெண்களுக்கான ஆசிய கோப்பை உள்ளரங்க ஹாக்கிப் போட்டி தாய்லாந்தில் நடக்கிறது. அதன் ஏ பிரிவில் உள்ள மலேசியா தனது முதல் லீக் ஆட்டத்தில் வியட்னாம் அணிக்கு எதிராக 25-0 என்ற கணக்கில் கோல் மழை ெபாழிந்து வென்றது. தொடர்ந்து மாலையில் நடந்த ஓமனுக்கு எதிரான லீக் ஆட்டத்திலும் 12-1 என்ற கோல் கணக்கில் அபாரான வெற்றியை மலேசிய வீராங்கனைகள் பெற்றனர்.

* தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் போட்டி இன்று பாங்காக் நகரில் தொடங்குகிறது. இந்தியா சார்பில் வீரர்கள் எச்.எஸ்.பிரணாய், கிரண் ஜார்ஜ், சதீஷ் கருணாகரன், வீராங்கனைகள் மாளவிகா பன்சூட், அஷ்மிதா சாலிஹா உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

* அயர்லாந்து-பாகிஸ்தான் இடையிலான 2வது டி20 ஆட்டம் நேற்று முன்தினம் டப்ளினில் நடந்தது. பாக் வென்ற அந்தப் போட்டியின் போது ஓய்வறைக்கு சென்ற பாக் வீரர் ஷாகின் ஷா அப்ரிடியை, ஆப்கானிஸ்தான் ரசிகர் ஒருவர் கசப்பான வார்த்தைகளை சொல்லி வசை பாடியுள்ளார். அது குறித்து அப்ரிடி உடனடியாக பாகிஸ்தான் பாதுகாவலரிடம் புகார் தெரிவித்தார். உடனடியாக அங்கு சென்ற பாக் பாதுகாவலர், சம்பந்தப்பட்ட ஆப்கான ரசிகரை அரங்கில் இருந்து வெளியேற்றினார். இச்சம்பவம் அரங்கில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

* ஃபிபா யு-17 பெண்கள் கால்பந்து 8வது உலக கோப்பை அக்.24 முதல் நவ.3ம் தேதி வரை கரிபீயன் தீவு நாடான டொமினிக்கன் ரிப்ளிக்கில் நடைபெற உள்ளது. நடப்பு சாம்பியன் ஸ்பெயின் உட்பட மொத்தம் 16 நாடுகள் பங்கேற்க உள்ளன. இந்தியாவில் 7வது யு-17 பெண்கள் உலக கோப்பை 2022ம் ஆண்டு நடந்தது.

* ரோம் நகரில் நடைபெறும் இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் பிரிவு 3வது சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தன. அதில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 2-0 என நேர் செட்களில் பிரிட்டன் வீரர் கேமரன் நோரியை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

The post சில்லி பாய்ன்ட்… appeared first on Dinakaran.

Tags : Asia Cup Women's Indoor Hockey Tournament ,Thailand ,Malaysia ,Vietnam ,Dinakaran ,
× RELATED தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஜோடி பட்டம் வென்றது