- Icourt
- மதுரை
- ஐகோர்ட் கிளை
- மனோஜ்
- அருன் குமார்
- புவனேஷ்
- ராஜா
- வசந்தகுமார்
- ராமநாதபுரம் மாவட்டம்
- பரமக்குடி
- தின மலர்
மதுரை: வாய்மையே வெல்லும் என்பதை மனதில் வைத்து அதிகாரிகள் செயல்பட வேண்டுமென ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்த மனோஜ், அருண்குமார், புவனேஷ், ராஜா, வசந்தகுமார் ஆகியோர் அப்பகுதியில் அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்ததாக தங்கள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர். இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில், இந்த வழக்கு பாரபட்சமாக, வேண்டுமென்றே பதிவு செய்யப்பட்டுள்ளது என வாதிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘‘போலீசார் யாரிடமும் பாகுபாடு காட்டக் கூடாது. வாய்மையே வெல்லும் என்பதை நினைவில் வைத்து அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும். இந்த வழக்கில் மனுதாரர் தரப்பு குற்றச்சாட்டு குறித்து போலீசார் முறையாக விசாரிக்க வேண்டும். மேலும் மனுதாரர்கள் மீதான வழக்கில் போலீசாரின் விசாரணையை 4 மாதத்திற்குள் முடித்து நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையோ, அல்லது வழக்கை முடிப்பதற்கான அறிக்கையையோ தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.
The post வாய்மையே வெல்லும் எனக்கருதி அதிகாரிகள் செயல்பட வேண்டும்: ஐகோர்ட் கிளை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.