×

அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவி சரோஜாவிடம் சைபர் மோசடி கும்பல் பணம் பறிக்க முயன்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தன்னை மிரட்டி பணம் பறிக்க முயன்ற மோசடி கும்பல் மீது நடவடிக்கை கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் சரோஜா புகார் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மர்மகும்பல் மோசடி முயற்சி செய்யபட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவி சரோஜாவிடம் ஆன்லைன் மோசடி செய்ய முயற்சி செய்துள்ளனர். டெலிகாம் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி பணம் பறிக்க திட்டமிட்டுள்ளனர்.

இரண்டு மணி நேரத்தில் செல்போன் நம்பர் செயலிழந்து விடும் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டு பேசுமாறு கூறி பணம் பறிக்க திட்டமீட்டுள்ளனர். ஆதார் ஆவணங்களை தவறாக பயன்படுத்தி மத்திய பிரதேசத்தில் குற்றவாளி ஒருவர் செல்போன் நம்பர் வாங்கியதாக கூறி மோசடி செய்துள்ளனர். மத்திய பிரதேசம் இந்தூர் காவல் நிலைய அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு சைபர் கிரைம் மோசடி கும்பல் கூறியுள்ளது.

தனியார் வாங்கி மேலாளர் சீன நாட்டினருடன் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் தொடர்பு இருப்பதாக கூறி மிரட்டல் விடுத்துள்ளனர். தனது வாட்ஸ்ஆப்-க்கு கைது வாரண்ட், சொத்துகளை முடக்குவதற்கான ஆவணம், அரசு முத்திரை உள்ள ஆவணங்களை அனுப்பி மிரட்டினர். தனது ஆவணங்களை பயன்படுத்தி வங்கியில் உள்ள பணத்தை திருட முயற்சிப்பதை அறிந்து அழைப்பை துண்டித்ததாக சரோஜா தகவல் தெரிவித்துள்ளார்.

The post அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,minister ,Ponnaiyan ,CHENNAI ,Saroja ,
× RELATED விக்கிரவாண்டி தேர்தலில் நாங்களும் பணம் தரவில்லை: அமைச்சர் ரகுபதி!