×

தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி, கோயில் விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பதை ஏற்க முடியாது : உயர்நீதிமன்றம்

சென்னை :தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி, கோயில் விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பதை ஏற்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விழுப்புரம் மேல்மலையனூர், பழைய மரக்காணம் கிராமத்தில் மாரியம்மன் கோயிலில் கூழ்வார்த்தல் விழா மே 18-ம் தேதி நடைபெறுகிறது. மே 18-ம் தேதி நடைபெறும் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது என்று இந்த வழக்கு விசாரணையில் நீதிபதி தெரிவித்தார்.

The post தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி, கோயில் விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பதை ஏற்க முடியாது : உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,High Court ,Villupuram Melamalayanur ,Old Marakanam Village ,Mariyamman ,Temple ,Koolvarta ,Dinakaran ,
× RELATED திருமணம் செய்யாமல் கணவன்-மனைவிபோல்...