×

குடிநீர் மற்றும் தடையின்றி மின்சாரம் வழங்குவது குறித்து துறைச் செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை.!!

சென்னை: குடிநீர் மற்றும் தடையின்றி மின்சாரம் வழங்குவது குறித்து துறைச் செயலாளர்களுடன் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் நீர்நிலைகள் வறண்டு வருகிறது. அதன் காரணமாக, தண்ணீர் தட்டுப்பாட்டால் விலங்குகள் முதல் மனிதர்கள்வரை தவிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

மற்றொருபக்கம் மக்களின் மின்சாரப் பயன்பாடும் வெகுவாக அதிகரித்து, மின்வெட்டு, மின்தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் மழை பெய்தாலும் கோடை வெப்பத்தின் தாக்கம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்தாலும் கோடை வெப்பத்தின் தாக்கம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையான குடிநீர், வெப்ப தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தடையின்றி மின் விநியோகம் கிடைக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட வேண்டிய இடங்கள் எத்தனை என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. ஆலோசனைக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். குடிநீர் வழங்கல், வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறைகளின் செயலாளர்கள், மின்வாரிய தலைவர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

The post குடிநீர் மற்றும் தடையின்றி மின்சாரம் வழங்குவது குறித்து துறைச் செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை.!! appeared first on Dinakaran.

Tags : SECRETARIES ,Chennai ,Chief Minister ,Shivtas Meena ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பட்டா மாறுதல் கேட்டு சமூக வலைதளத்தில்...