இம்பால்: மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் அளித்த பேட்டியில், ‘கடந்தாண்டு பிப்ரவரி மாதம் மணிப்பூரில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிய அமைச்சரவை துணைக் குழு அமைக்கப்பட்டது. விரல்ரேகை, கண் கருவிழிப்படல பதிவு எடுக்கப்பட்டதில், சன்டேல் பகுதியில் உள்ள 10 கிராமங்களில் 1,165 பேரும், டென்னௌபால் மாவட்டத்தில் 1,147 பேரும் சுராசந்த்பூரில் 154 பேரும், காம்ஜோங் மாவட்டத்தில் சிலரும் சட்டவிரோதமாக குடியேறியிருப்பது தெரியவந்தது. காம்ஜோங் மாவட்டத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 5,457 பேர் சோ்க்கப்படவில்லை.
அந்த 5,457 பேரில் 5,173 பேரின் விரல்ரேகை, கண் கருவிழிப்படல பதிவு எடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் 329 பேர் மியான்மர் நாட்டில் நிலைமை சரியாகி வருவதால் தாமாக முன்வந்து தங்கள் நாட்டுக்கு திரும்பிச் சென்றுள்ளனர். மணிப்பூரில் 2,480 பேர் சட்டவிரோதமாகக் குடியேறியிருப்பதாக மாநில அமைச்சரவை துணைக் குழு கண்டறிந்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டு மே 3ம் தேதி மாநிலத்தில் வன்முறை வெடித்த பிறகு அந்த ஆய்வு பணிகள் நிறுத்தப்பட்டன’ என்றார்.
The post மணிப்பூர் மாநிலத்தில் 2,480 பேர் சட்டவிரோத குடியேற்றம்: மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் பேட்டி appeared first on Dinakaran.