×

மீன்பிடிக்க நீர் நிலைகளில் தண்ணீர் இறைக்க கூடாது கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்காது

*கலெக்டருக்கு பேரிடர் பயிற்சியாளர் மனு

திருத்துறைப்பூண்டி: மீன்பிடிக்க நீர் நிலைகளில் தண்ணீர் இறைப்பதால், கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்காது என்று மாவட்ட கலெக்டருக்கு பேரிடர் பயிற்சியாளர் மனு அளித்துள்ளார்.திருத்துறைப்பூண்டி பேரிடர் பயிற்சியாளர் பாலம் செந்தில்குமார் திருவாரூர் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது.

தமிழ்நாட்டில் தற்போது வழக்கத்தைவிட அதிக வெப்பம் பதிவாகி கொண்டிருக்கிறது, குளம், குட்டை, ஏரி, வாய்க்கால், ஆறுகளில் தண்ணீர் தினந்தோறும் குறைந்து வருகிறது. கிராமங்களில் கால்நடைகள் வயல்வெளியில் மேய்ந்துவிட்டு வாய்க்கால், ஆறு, குட்டைகளில் தண்ணீர் அருந்தி வருகிறது. தண்ணீர் வற்றி வருவதால் மீன் குத்தகைதாரர்கள் மீன்பிடிக்க தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

இதனால் கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்காது, எனவே தண்ணீரை இறைக்காமல் வலை பயன்படுத்தி மீன்களை பிடிக்க வேண்டும், எனவே வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post மீன்பிடிக்க நீர் நிலைகளில் தண்ணீர் இறைக்க கூடாது கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்காது appeared first on Dinakaran.

Tags : Thiruthurapoondi ,Tamilnadu ,
× RELATED திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ்...