×

இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 37 பேர் பலி: நிலச்சரிவில் பலர் மாயமானதால் அதிர்ச்சி

இந்தோனேசியா: இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் எரிமலை கரும்புகை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இதனிடையே கனமழை மற்றும் எரிமலை கரும்புகை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் 2 கிராமங்கள் மூழ்கின. 100க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் கனமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தூர் எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் பலர் மயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

கனமழை வெள்ளத்தால் சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்த நிலையில் அதனை அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்டு அந்நாட்டு அரசு முகாம்களில் தங்கவைத்துள்ளது. மேலும் படுகாயத்துடன் மீட்கப்பட்ட பலருக்கு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. களத்தில் இறங்கிய பேரிடர் மீட்பு குழு மீட்பு பணியை துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

The post இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 37 பேர் பலி: நிலச்சரிவில் பலர் மாயமானதால் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : West Sumatra, Indonesia ,Indonesia ,West Sumatra island ,Dinakaran ,
× RELATED இந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில்...