×

மரக்காணம் அருகே பள்ளி மாணவி காதலனுடன் சென்றதால் தாய் தூக்குபோட்டு தற்கொலை

மரக்காணம் : மரக்காணம் அருகே காணிமேடு பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (40) விவசாயி. இவருடைய 17 வயது மகள் மரக்காணத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவி கடந்த 9ம் தேதி மாயமாகி உள்ளார். இதுகுறித்து மாணவியின் தந்தை சக்கரவர்த்தி எனது மகளை எங்கள் கிராமத்தில் உள்ள கோபி (24) என்பவர் தான் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுவிட்டார். எனவே, எனது மகளை மீட்டு எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கடந்த 9ம் தேதி மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை சிறுமியின் தாய் வனிதா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு மரக்காணம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் வனிதா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.இதுகுறித்து தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் வனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கனகசெட்டிகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக மரக்காணம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மரக்காணம் அருகே பள்ளி மாணவி காதலனுடன் சென்றதால் தாய் தூக்குபோட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Marakanam ,Chakraborty ,Kanimedu Pilliyar Koil Street ,Marakkanam ,
× RELATED லஞ்ச வழக்கில் பிடிபடும் ஊழியரை...