×

மெட்ரோ ரயில் உதவி மேலாளரை தாக்கிய வழக்கு: பின்னணி பாடகர் வேல்முருகன் மீது வழக்குப்பதிவு

சென்னை: மெட்ரோ ரயில் உதவி மேலாளரை தாக்கிய வழக்கில் பின்னணி பாடகர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். பின்னணி பாடகர் வேல்முருகன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். சாலையில் இருந்த பேரிகாடை நகர்த்திவிட்டு காரை இயக்க முயன்ற வேல்முருகனுக்கும், உதவிமேலாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வேல்முருகன், உதவி மேலாளரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

 

The post மெட்ரோ ரயில் உதவி மேலாளரை தாக்கிய வழக்கு: பின்னணி பாடகர் வேல்முருகன் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Metro ,Velmurugan ,Chennai ,metro train ,Metro Rail ,Dinakaran ,
× RELATED வழித்தட தூண்களில் விளம்பர பலகை வைத்து...