சென்னை: சிபிஎஸ்இ நடத்திய 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் என்னும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் படித்த 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்தது. இந்த தேர்வில் நாடு முழுவதும் 38 லட்சம் பேர் பங்கேற்றனர்.
இந்நிலையில் தேர்வு முடிவுகள் மே 20ம் தேதிக்குள் வெளியாகும் என்று சிபிஎஸ்இ அறிவித்து இருந்தது. முதலில் 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை மே 12ம் தேதி வெளியிடலாம் என சிபிஎஸ்இ திட்டமிட்டு இருந்தது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக நேற்று வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை முதலில் வெளியிட வேண்டும் என்பதில் சிபிஎஸ்இ உறுதியாக இருக்கிறது.
விரைவில் வெளியிடும் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. தேர்வு எழுதியுள்ள மாணவ மாணவியர் சிபிஎஸ்இ இணைய தளத்தில் தங்களின் பிறந்த தேதி மற்றும் 6 இலக்க தேர்வு எண்ணை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
The post சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகிறது appeared first on Dinakaran.