சென்னை: சமீபத்தில் உயர்த்தப்பட்ட முத்திரைக் கட்டணங்கள் குறித்தான அரசாணையை திரும்ப பெற வேண்டும் என அதிமுக பொதுச்செயலளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:
பதிவுத்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை கடந்தாண்டு ஜூலை 8ம் தேதி தமிழ்நாடு அரசு உயர்த்தியது. இதனால், மிகுந்த சிரமத்திற்கு மக்கள் ஆளாகினர். இந்தநிலையில் தற்போது முத்திரைக் கட்டணத்தையும் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், தத்தெடுப்பு ஆவணங்கள், ஒப்பந்த ஆவணங்கள், ரத்து பத்திரங்கள், நகல் பத்திரங்கள், குடும்ப உறுப்பினர் பவர் பத்திரம் வழங்குதல் உள்ளிட்ட 26 சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
இருக்கின்ற நிதியை சரிவர மேலாண்மை செய்து, புதிதாக வாங்கும் கடன்களை மூலதன செலவுகளாகவும், மக்கள் நலத்திட்டங்களிலும் முதலீடு செய்வதே நல்ல அரசின் இலக்கணம். எனவே, தற்போது உயர்த்தப்பட்டுள்ள முத்திரைக் கட்டணங்களுக்காக வெளியிடப்பட்டுள்ள அரசாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post முத்திரைக்கட்டணம் உயர்வு அரசாணையை திரும்ப பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.