×

சென்னையில் இருந்து இசிஆர் வழியாக புதுச்சேரி மற்றும் கடலூருக்கு கூடுதலாக 100 பேருந்துகள்: போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னையில் இருந்து இசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் நாகப்பட்டினத்திற்கு 100 கூடுதல் பேருந்துகளை அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இயக்க தொடங்கியுள்ளன. தமிழகத்தில் 8 அரசு போக்குவரத்து கழகங்கள் முலம் தினசரி 9500 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் மாநகர் போக்குவரத்து கழகம் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பேருந்துகளை இயக்குகிறது. அரசு விரைவு போக்குவரத்து கழகம் மாவட்டங்களுக்கு இடையேயும், அண்டை மாநிலங்களுக்கும் பேருந்துகளை இயக்குகிறது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வந்த பின் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இயக்கப்படுகிறது. தற்போது கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இசிஆர் வழியாக வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் நாகப்பட்டினத்திற்கு 100 கூடுதல் பஸ்களை அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இயக்கத் தொடங்கியுள்ளன.

இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: இசிஆர் வழியாக இயக்கப்படும் பேருந்துகளில் பயணிகளின் எண்ணைக்கை அதிகரித்து உள்ளது. அதனால் கோயம்பேட்டில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஜிஎஸ்டி சாலை வழியாக இயக்கப்படும் வெளியூர் பேருந்துகள் கிளம்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்ட பிறகு, இசிஆர் வழியாக சுமார் 170 பேருந்துகளை இயக்குகின்றன. பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் இசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினத்திற்கு தினமும் கூடுதலாக 100 பேருந்துகளை இயக்கத் தொடங்கியுள்ளோம். கிளம்பாக்கத்தில் இருந்து திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய இடங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினார்.

The post சென்னையில் இருந்து இசிஆர் வழியாக புதுச்சேரி மற்றும் கடலூருக்கு கூடுதலாக 100 பேருந்துகள்: போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Puducherry ,Cuddalore ,ECR ,Transport Corporation ,Nagapattinam ,Government Transport Corporations ,Tamil Nadu ,ECR: Transport Corporation ,
× RELATED தனியார் பஸ்சில் ₹10 லட்சம் சிக்கியது சென்னை வாலிபரிடம் ஐடி விசாரணை