×

ஜார்க்கண்ட் அமைச்சருக்கு ஈடி சம்மன்

ராஞ்சி: ஜார்க்கண்ட் ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக இருப்பவர் ஆலம்கிர் ஆலம். கடந்த வாரம் அமைச்சரின் தனி செயலாளர் சஞ்சீவ் லால், வீட்டு பணியாளர் ஜகாங்கீர் ஆலம் ஆகியோர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்தனர். இதில், கணக்கில் வராத ரூ.32 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆலம்கிர் ஆலமுக்கு அமலாக்கத்துறை நேற்று சம்மன் அனுப்பியுள்ளது.

The post ஜார்க்கண்ட் அமைச்சருக்கு ஈடி சம்மன் appeared first on Dinakaran.

Tags : ED ,Jharkhand ,minister ,Ranchi ,Rural Development ,Alamgir Alam ,private secretary ,Sanjiv Lal ,Jagangeer Alam ,Dinakaran ,
× RELATED பணமோசடி வழக்கு ஜார்க்கண்ட் அமைச்சரிடம் ஈடி விசாரணை