- அஇஅதிமுக
- மதுரை எய்ம்ஸ்
- ராஜன் செல்லப்பா லகா
- திருப்பரங்குன்றம்
- ராஜன் செல்லாப்பா
- சட்டமன்ற உறுப்பினர்
- எடப்பாடி
- எய்ம்ஸ்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்
திருப்பரங்குன்றம், மே 13: பத்து ஆண்டு ஆட்சியில் இருந்தபோது கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டு, தற்போது மதுரை எய்ம்ஸ் பணி துவங்க அதிமுக சார்பில் எடப்பாடி தலைமையில் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக ராஜன் செல்லப்பா எம்எல்ஏ கூறி உள்ளார்.
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2014ம் ஆண்டு ஒன்றிய பாஜ அரசு அறிவித்தது. ஆனால், அதற்கான இடத்தை தேர்வு செய்வதில் நீண்ட இழுபறி நீடித்தது. இறுதியாக மதுரை மாவட்டம், தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதற்கான எந்த பணியும் துவங்கப்படவில்லை. இந்த சூழலில், 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வந்தது. 5 ஆண்டுகளாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைய எந்த பணியும் தொடங்காத நிலையில், கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு கூட்டணியில் இருந்த எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு எய்ம்ஸ் அமைக்க ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தரவில்லை. 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எய்ம்ஸ் கட்டுமானப்பணியை தொடங்க வலியுறுத்தப்பட்டது. இருப்பினும் ஒன்றிய அரசு நிதி ஒதுக்காததால் எய்ம்ஸ் அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சுமார் 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருந்தும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது குறித்து கண்டுகொள்ளவில்லை. தற்போது எடப்பாடி தலைமையில் போராட்டம் நடத்த போவதாக அக்கட்சியின் எம்எல்ஏ அறிவித்து உள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா நேற்று நிருபர்களிடம் கூறுகையில் ‘‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டிட பணிகளை முறைப்படி துவக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், அதற்கான நிர்வாகத்தை முறைப்படுத்தவும் வலியுறுத்தி, அதிமுக சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் ஒதுக்கியும் பணிகள் நடைபெறாமல் இருப்பது, நிர்வாகத்தின் சீர்கேட்டை தெளிவாக காட்டுகிறது. எனவே அதிமுக சார்பாக எடப்பாடி பழனிசாமியை மதுரைக்கு அழைத்து வந்து அவரது தலைமையில் எங்கள் போராட்டத்தை நடத்துவோம்’’ என்றார்.
The post 10 ஆண்டு ஆட்சியில் இருந்தபோது கண்டு கொள்ளாமல் மதுரை எய்ம்ஸ் பணி துவங்க அதிமுக சார்பில் போராட்டமாம்…: ராஜன் செல்லப்பா லக…லக… appeared first on Dinakaran.