×

தாய், மனைவி, 3 குழந்தைகளை கொன்று ‘சைக்கோ’ நபர் தற்கொலை: உத்தரபிரதேசத்தில் பயங்கரம்

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டம் பிளாஹாபூர் பகுதியை சேர்ந்தவர் அனுராக் சிங் தாக்கூர் (42). தாய் சாவித்திரி சிங்கின் (65), மனைவி மனைவி பிரியங்கா (40), குழந்தைகளான அஷ்வினி (12), அஷ்வி (10), அத்வைத் (6) ஆகியோருடன் வசித்து வந்தார். குடிப்பழக்கம் கொண்ட அனுராக் சிங் தாக்கூர், தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு ெசய்து வந்தார். இவர்களது தகராறை தடுக்க முயன்ற தாயையும் அனுராக் சிங் தாக்கினார். இந்நிலையில் நேற்று குடும்பத்தில் சண்டை ஏற்பட்டதால் கீழே கிடந்த சுத்தியால் தனது தாயை சரமாரியாக தாக்கினார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த மாமியாரை மீட்க முயன்ற மனைவி பிரியங்காவை அனுராக் சிங் துப்பாக்கியால் சுட்டார். அவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அப்போது, வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்த மூன்று குழந்தைகளையும் சுத்தியால் சரமாரியாக தாக்கினார். பின்னர், அவர்களது உடல்களை தரை தளத்திற்கு தூக்கி வீசி எறிந்தார். பின்னர் தானும் துப்பாக்கியால் சுட்டு அனுராக் சிங் தற்கொலை செய்து கொண்டார்.

அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததால், சந்தேகமடைந்த அனுராக்கின் சகோதரர் அஜித், அதே வீட்டின் மற்றொரு அறையில் தூங்கிக்கொண்டிருந்து பின்னர் வெளியே வந்து பார்த்தார். அப்போது ரத்த வெள்ளத்தில் தாய், அண்ணன், அண்ணி, 3 குழந்தைகளின் சடலங்கள் கிடந்தன. அதிர்ச்சியடைந்த அவர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். அவர்கள் 6 பேரின் சடலங்களை கைப்பற்றி விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில் தாய், மனைவி, 3 குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது.

The post தாய், மனைவி, 3 குழந்தைகளை கொன்று ‘சைக்கோ’ நபர் தற்கொலை: உத்தரபிரதேசத்தில் பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,Lucknow ,Anurag Singh Thakur ,Plahapur ,Sitapur district ,Savitri Singh ,Priyanka ,Ashwini ,Ashvi ,Advaid ,Payangaram ,
× RELATED வாக்குவாதம் செய்ததை தடுத்ததால் விமான...