×

சபரிமலை கோயில் நடை 14ம் தேதி திறப்பு

திருவனந்தபுரம்: வைகாசி மாத பிறப்பு மற்றும் பிரதிஷ்டை தின பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 14ம் தேதி திறக்கப்படுகிறது. 19ம் தேதி பிரதிஷ்டை தின சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 14ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. மறுநாள் (15ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷபூஜை உள்பட வழக்கமான பூஜைகளுடன் படிபூஜை, உதயாஸ்தமய பூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

வரும் 19ம் தேதி சபரிமலை கோயில் பிரதிஷ்டை தினமாகும். இதை முன்னிட்டு அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை தினமும் காலையில் நெய்யபிஷேகமும் நடைபெறும். 19ம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். வைகாசி மாத பூஜைகளும், பிரதிஷ்டை தினமும் சேர்ந்து வருவதால் சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் செங்கணூர், பத்தனம்திட்டா உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து கேரள அரசு போக்குவரத்து கழகம் 100 சிறப்பு பஸ்களை இயக்குகிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும். நிலக்கல், பம்பை ஆகிய இடங்களில் உடனடி முன்பதிவு கவுண்டர்களும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post சபரிமலை கோயில் நடை 14ம் தேதி திறப்பு appeared first on Dinakaran.

Tags : Sabarimalai Temple Walk ,Thiruvananthapuram ,Sabarimalai Aiyappan Temple Walk ,Vaikashi Nativity ,Pratishya Pooja ,Sabarimalai Aiyappan Temple Walk 14th ,Vaikasi Month Pooja ,Sabarimala temple walk ,
× RELATED ஓடும் பஸ்சிலிருந்து கீழே விழ இருந்த வாலிபரை காப்பாற்றிய கண்டக்டர்