×

பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் செல்வதால் யமுனோத்ரி புனித யாத்திரையில் தள்ளுமுள்ளு: பயணத்தை ஒத்திவைக்க காவல்துறை வேண்டுகோள்

உத்தரகாசி: யமுனோத்ரி புனித யாத்திரையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பக்தர்கள் தங்களது பயணத்தை ஒத்திவைக்குமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் நான்கு புண்ணிய ஸ்தலங்களான கேதார்நாத், யமுனோத்ரி, பத்ரிநாத், கங்கோத்ரிக்கான புனித பயணம் தொடங்கியது. பத்ரிநாத் கோயில் இன்று திறக்கப்பட்டது. முதல் நாளான இன்று 32 ஆயிரம் பக்தர்கள் கேதார்நாத்தை அடைந்தனர். அதேபோல் யமுனோத்ரிக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சிலர் ஆபத்தான மலைப்பாதையில் முண்டியடித்துக் கொண்டு செல்கின்றனர்.

கழுதைகள் மற்றும் வண்டி ஓட்டுபவர்களும் இந்த கூட்டத்தில் சிக்கியுள்ளனர். மலைப்பாதையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உத்தரகாண்ட் போலீஸ் நிர்வாகம் இன்று வெளியிட்ட பதிவில், ‘யமுனோத்ரிக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்கு ஏற்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடுதலான பக்தர்களை அனுப்பி வைப்பதால், நிலைமை கட்டுக்குள் இருக்காது. எனவே இன்று யமுனோத்ரி யாத்திரை செல்லும் பக்தர்கள் தங்களது யமுனோத்ரி யாத்திரையை ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்று தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து உத்தரகாசி காவல்துறை கண்காணிப்பாளர் அர்பன் யதுவன்ஷி கூறுகையில், ‘வைரலான வீடியோ ஜானகி சட்டியில் எடுக்கப்பட்டுள்ளது. 200 மீட்டர் சுற்றளவில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கனமழைக்கு மத்தியில் ஏராளமான பக்தர்கள் யமுனோத்ரி நோக்கிச் சென்றதால் கூட்டம் அதிகமானதாக தெரிந்தது. தற்போது நிலைமையை கட்டுப்படுத்தி உள்ளோம். தள்ளுமுள்ளுவில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை’ என்றார்.

The post பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் செல்வதால் யமுனோத்ரி புனித யாத்திரையில் தள்ளுமுள்ளு: பயணத்தை ஒத்திவைக்க காவல்துறை வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Yamunotri ,Uttarakhand ,Kedarnath ,Badrinath ,Gangotri ,Dinakaran ,
× RELATED இமயமலைத் தொடரில் அமைந்துள்ள...