×
Saravana Stores

மெரினாவில் பாய்மர படகு விளையாட்டு தளம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் ரூ.7 கோடி செலவில் பாய்மர படகு விளையாட்டு தளம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு படகு இல்லம் இருந்த இடத்தில் 2.75 ஏக்கர் பரப்பளவில் பாய்மர படகு அகாடமி அமைக்க திட்டமிட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் 2.75 ஏக்கர் பரப்பளவில் கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் பாய்மர படகு விளையாட்டு தளம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விண்ணப்பம் செய்துள்ளது.

இந்த விளையாட்டு தளம், கீழ் மற்றும் முதல் தளம் என்று இரண்டு தளங்கள் கொண்ட கட்டிடமாக கட்டப்பட உள்ளது. கீழ் தளத்தில் பயிற்சி அறை, படகு நிறுத்தும் இடம், மற்றும் நீச்சல் குளம் உள்ளிட்டவைகள் அமைய உள்ளது. முதல் தளத்தில் திறந்தவெளி வகுப்பறை, யோகா அறை, நூலக அறை, ஜிம், விளையாட்டு அறிவியல் பயிற்சி அறை, வரவேற்பு அறை உள்ளிட்டவைகள் அமைய உள்ளது.

நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக், நடக்கவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாடு வீரர்கள் பாய்மரப்படகு போட்டிகள் கலந்து கொண்டு சாதித்த நிலையில் தமிழ்நாட்டில் மெரினா கடற்கரையில் பாய்மரப்படகு தளம் அமைய இருப்பது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

The post மெரினாவில் பாய்மர படகு விளையாட்டு தளம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Baimara Boat Sports Site ,Chennai ,Tamil Nadu government ,Baimara ,Chennai Marina beach ,Kowam River ,Chennai Marina ,Marina ,Dinakaran ,
× RELATED இளைஞர்களை கவரும் வகையில் புதிய சேவை.....