×

சாத்தூரில் உள்ள அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க அழைப்பு

சாத்தூர், மே 12: சாத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் எதிர்வரும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் பிட்டர், கம்மியர், மோட்டார் வண்டி எலக்ட்ரிசியன், சோலார் டெக்னாலஜி, ஃபயர் டெக்னாலஜி போன்ற பிரிவுகளில் மாணவர்கள் சேரலாம். மேலும் தமிழக அரசு மற்றும் டாடா கன்சல்டன்சி உடன் இணைந்து புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய இண்டஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ் அண்ட் டிஜிட்டல் மேனுஃபேக்சரிங் டெக்னிசியன், மேனுஃபாக்சரிங் ப்ராசஸ் கண்ட்ரோல் அண்ட் ஆட்டோமேஷன், அட்வான்ஸ்டு CNC மிஷினிங் டெக்னிசியன் ஆகிய மூன்று தொழில் பிரிவுகளிலும் இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த பயிற்சி முடிந்தவுடன் தனியார் மற்றும் அரசு துறைகளில் அப்ரண்டீஸ் மற்றும் நேரடி வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

விருப்பமுள்ள மாணவர்கள் தங்களது அசல் கல்வி மற்றும் ஜாதி சான்றிதழ்களுடன் அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.50. நேரில் வர இயலாதவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.750, வழங்கப்படும். மேலும் மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ், சீருடை மற்றும் அரசு வழங்கும் ஏனைய சலுகைகள் அனைத்தும் வழங்கப்படும். மாணவர்களுக்கு விடுதி வசதி உள்ளது. இக்கல்வி நிலையத்தில் சேர இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி நாள் 07.06.2024 ஆகும். சாத்தூர் சுற்று வட்டாரங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு ஐடிஐயின் முதல்வர் மாரீஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

The post சாத்தூரில் உள்ள அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Govt ITI ,Chatur ,Chatur Government Vocational Training Institute ,Dinakaran ,
× RELATED விருப்பமுள்ள சிறைவாசிகளின் விவரங்கள்...