×

தேர் அலங்கரிக்கும் பணி தீவிரம்

திருப்பூர், மே 12: திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோயில், வீரராகவ பெருமாள் கோயிலில் வைகாசி விசாக தேர்த்திருவிழா வரும் 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 23ம் தேதி விஸ்வேஸ்வர சுவாமி தேரோட்டமும் 24ம் தேதி வீரராகவர் தேரோட்டமும் நடைபெற உள்ளது. தேர் திருவிழாவினை முன்னிட்டு வீரராகவ பெருமாள் கோயில் அருகே உள்ள தேர் நிலையில் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு தேர்களுக்கும் முகூர்த்தக்கால் நடப்பட்டு சாரம் கட்டு பணி நடைபெற்று வருகிறது. வரும் 19ம் தேதி தேரில் கலசம் பொருத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

The post தேர் அலங்கரிக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Vaikasi Visakha Therthiru Festival ,Vishweshwara Swamy Temple ,Veeraragava Perumal Temple ,Visveswara ,Swamy Chariot ,Veeraragavar ,Chariot ,
× RELATED சாயக்கழிவுநீரை திறந்து விடும் சாய...