×

2 நாள் டாஸ்மாக் விடுமுறை மதுக்கடைகளில் குவிந்த குடிமகன்கள்

பள்ளிப்பட்டு, மே 12: ஆந்திராவில் நாளை சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தலையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிப்பட்டு, அத்திமாஞ்சேரிபேட்டை, கோரகுப்பம், திருத்தணி அருகே மத்தூர், கனகம்மாசத்திரம் உள்பட மாவட்டத்தில் ஆந்திர எல்லைப் பகுதியில் 17 மதுக்கடைகள் நேற்று மாலை 7 மணி முதல் 13ம் தேதி இரவு 7 மணி வரை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிப்பட்டு பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் நேற்று பகல் 12 மணிக்கு திறப்புக்கு முன்பே மதுக்கடை அருகே ஏராளமான குடிமகன்கள் காத்திருந்து மது வாங்கி சென்றனர். மேலும் மது வாங்க ஆந்திர கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் பள்ளிப்பட்டில் குவிந்து பகல் 12 மணி முதல் இரவு 7 வரை கூட்டம் கூட்டமாக மது வாங்கி சென்றனர். இதேபோல் எல்லையோர பகுதிகளில் உள்ள மதுக் கடைகளில் குடிமக்கள் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.

The post 2 நாள் டாஸ்மாக் விடுமுறை மதுக்கடைகளில் குவிந்த குடிமகன்கள் appeared first on Dinakaran.

Tags : Tasmac Holiday ,Bars Pallipattu ,Andhra Pradesh ,Pallipattu ,Atthimancheripet ,Gorakuppam ,Thiruthani ,Mathur, Kanakammasatram ,Andhra border ,Tiruvallur district ,Andhra border region ,
× RELATED வரி செலுத்துவதில் முறைகேடு: ஆந்திர...