×

செங்கல்பட்டு பகுதியில் மிதமான மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

செங்கல்பட்டு, மே 12: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி வந்தது. பகல் நேரத்தில் வெப்ப அலை வீசி வந்ததால் பொதுமக்கள் வெளியே வர முடியாத நிலை உருவாகியிருந்தது. இந்தநிலையில் தமிழகத்தில் நேற்று காலை 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. குறிப்பாக செங்கல்பட்டு, விழுப்புரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமாரி, சிவகங்கை ஆகிய மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று காலை செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதேபோல் திம்மாவரம், புலிப்பாக்கம், காந்தலூர் ஆத்தூர், வல்லம், மேலமையூர், பரனூர், மகேந்திராசிட்டி, சிங்கபெருமாள்கோவில், மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர் பொத்தேரி ஆகிய பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. 30 நிமிடங்களுக்கு மேலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிச்சியான சூழ்நிலை நிலவி பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post செங்கல்பட்டு பகுதியில் மிதமான மழை: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் அஞ்சல்துறை...