×

அர்ஜெண்டினாவில் காலி பெட்டி மீது ரயில் மோதி 90 பயணிகள் காயம்


ப்யூனர்ஸ் அயர்ஸ்: அர்ஜெண்டினாவில் தண்டவாளத்தில் இருந்த காலி பெட்டி மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 90 பயணிகள் காயமடைந்தனர். அர்ஜெண்டினா தலைநகர் ப்யூனஸ் அயர்சில் இருந்து 7 பெட்டிகளை கொண்ட பயணிகள் ரயில் ஒன்று வடக்கு புறநகர் பகுதிக்கு நேற்று சென்று கொண்டிருந்தது.

அப்போது தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த பெட்டி மீது பயணிகள் ரயில் வேகமாக மோதி தடம் புரண்டது. சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு குழுவினர் காயமடைந்த பயணிகளை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

The post அர்ஜெண்டினாவில் காலி பெட்டி மீது ரயில் மோதி 90 பயணிகள் காயம் appeared first on Dinakaran.

Tags : Argentina ,Buenos Aires ,Argentine ,Dinakaran ,
× RELATED சில்லி பாய்ன்ட்…