×

துபாயில் இருந்து மங்களூரு வந்தபோது நடுவானில் விமானத்தில் இருந்து கடலில் குதிப்பதாக பயணி தகராறு: தரையிறங்கியதும் அதிரடியாக கைது


மங்களூரு: கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த முஹம்மது பிசி. இவர், கடந்த 8ம் தேதி, துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மங்களூரு புறப்பட்டார். நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது அவர், திடீரென விமானத்தில் இருந்து கீழே கடலில் குதிப்பதாக கூறி தகராறு செய்தார். இதை பார்த்த விமான பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் விமான ஊழியர்கள் மற்றும் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. விமானத்தில் இருந்து கடலில் குதித்து விடுவேன் என மிரட்டிய அவரது செயல் மற்றவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து விமானம் மங்களூரில் தரையிறங்கியதும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் சித்தார்த்த தாஸ், பாஜ்பே போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post துபாயில் இருந்து மங்களூரு வந்தபோது நடுவானில் விமானத்தில் இருந்து கடலில் குதிப்பதாக பயணி தகராறு: தரையிறங்கியதும் அதிரடியாக கைது appeared first on Dinakaran.

Tags : Mangalore ,Dubai ,Muhammad B.C. ,Kannur, Kerala ,Mangaluru ,Dinakaran ,
× RELATED சென்னை- துபாய் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்