×

தேர்தல் பரப்புரை செய்தமைக்காக கமல்ஹாசனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த திருமாவளவன்


சென்னை: சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் விசிக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு பரப்புரை செய்தமைக்காக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் மற்றும் விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் போட்டியிட்டனர். அவர்களை ஆதரித்து கமல்ஹாசன் தனது தேர்தல் பரப்புரையை நிகழ்த்தி இருந்தார். இந்நிலையில், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசனை விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

தற்போதைய அரசியல் மற்றும் தேர்தல் நிலவரம் குறித்து இருவரும் கலந்துரையாடினர். சந்திப்பின் போது, விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார், துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் அருணாச்சலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post தேர்தல் பரப்புரை செய்தமைக்காக கமல்ஹாசனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த திருமாவளவன் appeared first on Dinakaran.

Tags : Thirumavalavan ,Kamal Haasan ,CHENNAI ,Party ,president ,President of ,People's ,Justice ,Center ,Visika ,Chidambaram ,Villupuram ,Liberation Tigers Party ,
× RELATED கள்ளச்சாராய வியாபாரிகளைத் தமிழ்நாடு...