×

ஆந்திராவில் விபத்தில் சிக்கிய மினிவேனில் கட்டுக்கட்டாக பணம்; தவிடு மூட்டைக்குள் பதுக்கி கடத்திய ரூ7 கோடி பறிமுதல்: வாக்காளர்களுக்கு வழங்க திட்டமா?


திருமலை: ஆந்திராவில் நாளை சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கிழக்கு கோதாவரி மாவட்டம் நல்லஜார்லா மண்டலம் அனந்தபள்ளி எர்ரகலுவா என்ற இடத்தில் நேற்று ஒரு மினி வேன் சென்றது. அப்போது பின்னால் வந்த லாரி, நிலை தடுமாறி மினிவேன் மீது மோதியது. இதில் மினி வேன் நிலை குலைந்து சேதமானது. மேலும் மோதிய லாரியின் முன்புறமும் சேதமானது. விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் அங்கு வந்தனர். அப்போது வேனில் தவிடு மூட்டைகள் இருந்தது.அைத அகற்றி பார்த்தனர். அப்போது அடியில் 7 பெட்டிகள் இருந்தது. இதையடுத்து தேர்தல் பறக்குபடை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் அங்கு வந்து போலீசாருடன் சேர்ந்து சோதனையிட்டனர். இதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. பின்னர் வேனை மீட்டு போலீஸ் நிலையம் கொண்டு வந்து சோதனையிட்டபோது, ரூ500, ரூ200, ரூ100 என பெட்டிகளில் மொத்தம் ரூ7 கோடி இருப்பது தெரிய வந்தது. வேனில் வந்தவர்களை பிடித்து விசாரித்தபோது, விஜயவாடாவில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு பணம் செல்வது தெரியவந்தது. இதையடுத்து வேனுடன் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் மற்றும் பறக்கும் படையினர், வாக்காளர்களுக்கு வழங்க கொண்டுவரப்பட்டதா? என விசாரணை நடத்தி வருகின்றனர். நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ரூ7 கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஆந்திராவில் விபத்தில் சிக்கிய மினிவேனில் கட்டுக்கட்டாக பணம்; தவிடு மூட்டைக்குள் பதுக்கி கடத்திய ரூ7 கோடி பறிமுதல்: வாக்காளர்களுக்கு வழங்க திட்டமா? appeared first on Dinakaran.

Tags : Andhra ,Tirumala ,Andhra Pradesh ,Ananthapalli Erragalua, Nallajarla Mandal, East Godavari District ,
× RELATED ஆந்திராவில் வாக்கு எண்ணிக்கை...