×

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக வேட்பாளரான நடிகை மீது வழக்கு: தெலங்கானா போலீஸ் நடவடிக்கை

ஐதராபாத்: சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக வேட்பாளரான நடிகை நவ்நீத் கவுர் ராணா மீது தெலங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த நடிகையும், அமராவதி தொகுதி பாஜக வேட்பாளருமான நவ்நீத் கவுர் ராணா, தெலங்கானாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ‘எங்களுக்கு 15 வினாடிகள் கொடுங்கள்…’ என்று குறிப்பிட்ட மதப் பிரிவினரை சுட்டிக்காட்டி சர்ச்சைக்குரிய கருத்தை கூறினார்.

மேலும், காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது பாகிஸ்தானுக்கு வாக்களித்ததற்கு சமம் என்றும் ேபசினார். இதுகுறித்து சவுடர்குடேம் தேர்தல் அதிகாரி எண்டபெட்லா கிருஷ்ண மோகன் அளித்த புகாரின் பேரில், நவ்நீத் கவுர் ராணா மீது ஷாத்நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘இரு மதப் பிரிவினருக்கு இடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசிய நவ்நீத் கவுர் ராணா மீது ஐபிசி பிரிவுகள் 171(சி), 171(எப்), 171 (ஜி) மற்றும் 188-ன் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது’ என்றனர்.

The post சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக வேட்பாளரான நடிகை மீது வழக்கு: தெலங்கானா போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : BJP ,Hyderabad ,Telangana ,Navneet Kaur Rana ,MAHARASHTRA STATE ,
× RELATED தெலங்கானாவில் நள்ளிரவில் தேசிய...