×

வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் மனிதர்களிடம் இருந்து மற்ற மனிதர்களுக்கு பரவுவதில்லை.. மக்கள் பீதி அடைய வேண்டாம் : பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னை : கேரளாவில் பரவும் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு தொடர்பாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், “வெஸ்ட் நைல் வைரஸ் என்பது க்யூலக்ஸ் வகை கொசுக்களால் பரவக் கூடியது. வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் மக்களில் 80% பேருக்கு அறிகுறிகள் காணப்படுவது இல்லை. காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல்வலி போன்றவை வெஸ்ட் நைல் காய்ச்சலின் அறிகுறிகளாகும். ஒரு சிலருக்கு அதிக காய்ச்சல், கழுத்து விரைப்பு, மயக்கம், கோமா, பலவீனம், பக்கவாதம், மூளைக் காய்ச்சல் ஏற்படும். அண்மையில் கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர் மாவட்டங்களில் வெஸ்ட் தைல் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. மூளைக் காய்ச்சல் போன்ற பாதிப்பு இருப்பின் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் மனிதர்களிடம் இருந்து மற்ற மனிதர்களுக்கு பரவுவதில்லை: அரசுஎலைசா மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் மூலம் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு இருப்பதை கண்டறியலாம். வெஸ் நைல் வைரஸ் காய்ச்சலால் மக்கள் பீதி அடைய வேண்டாம். காய்ச்சலுக்கான உரிய சிகிச்சையை மருத்துவ ஆலோசனையின்பேரில் எடுத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சலினால் ஏற்படும் நீரிழப்பினை தவிர்த்திட போதியளவு நீர் மற்றும் திரவ உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வீடுகளை சுற்றி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்; நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சுயமாக சிகிச்சை மேற்கொள்வதை தடுக்க வேண்டும்; வீடுகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் மனிதர்களிடம் இருந்து மற்ற மனிதர்களுக்கு பரவுவதில்லை.. மக்கள் பீதி அடைய வேண்டாம் : பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Public Health Department of Tamil Nadu ,Nile ,outbreak ,Kerala ,Department of Public Health ,Public Health Department ,
× RELATED கேரளாவில் பரவும் வெஸ்ட் நைல் வைரஸ்...