×

சோளிங்கர் அருகே 20 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து சீரான மின்விநியோகம்

*பொதுமக்கள் நிம்மதி

சோளிங்கர் : சோளிங்கர் அருகே 20 ஆண்டுகளாக நீடித்த குறைந்த மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் புதிய மின்டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.சோளிங்கர் அடுத்த செங்கல்நத்தம் ஊராட்சிக்குட்பட்ட ராமாபுரம் பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த மின்னழுத்தம் (ேலா-வோல்டேஜ்) பிரச்னை இருந்து வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இப்பிரச்னையை தீர்க்கக்கோரி கொடைக்கல் மின் அலுவலகத்தில் கடந்த 2003ம் ஆண்டு முதல் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

அதன்பேரில் மின்வாரியம் சார்பில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த பணிகள் பாதியில் கைவிடப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் ராமாபுரம் பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் தொடங்கியது.

இப்பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று புதிய டிரான்ஸ்பார்மர் தொடக்க விழா நடந்தது. இதில் செயற்பொறியாளர் சண்முகம், வெங்கடாபுரம் உதவி செயற்பொறியாளர் உமா சந்திரா, கொடைக்கல் மின் பொறியாளர் தமிழ்ச்செல்வி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.20 ஆண்டுகளாக நீடித்து வந்த குறைந்த மின்னழுத்த பிரச்னைக்கு நேற்று தீர்வு ஏற்பட்டுள்ளதால் கிராம மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். மேலும் மின்வாரியத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

The post சோளிங்கர் அருகே 20 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து சீரான மின்விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Solingar ,Solinger ,Ramapuram ,Chengalnatham Panchayat ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்...