×

ஊட்டியில் இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு

ஊட்டி : இ பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைந்தே காணப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் மலர் கண்காட்சி தாவரவியல் பூங்காவில் நடத்தப்படும். இந்த மலர் கண்காட்சிையை காண வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். மலர் கண்காட்சி நடக்கும் நாட்களில் 2 லட்சம் சுற்றுலா பயணிகள் வருவது வாடிக்கை.

மேலும் அனைத்து சாலைகளிலும் வாகன நெரிசல் காணப்படும். ஊட்டி மட்டுமின்றி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து லாட்ஜ் மற்றும் காட்டேஜ்கள் நிரம்பி வழியும். சுற்றுலா பயணிகளை நம்பி தொழில் செய்யும் நாடைபாதை வியாபாரிகள் முதல் பெரிய அளவில் வியாபாரம் செய்பவர்கள் வரை வியாபாரம் களைகட்டும். அதேபோல் சுற்றுலா வாகனங்கள், ஆட்டோக்கள் என அனைத்து தொழில் செய்பவர்களுக்கும் இது ஒரு ‘போனஸ்’ நாட்களாக அமையும். ஆனால், இம்முறை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 7ம் தேதி முதல் இ-பாஸ் அறிமுகம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு கடந்த 7ம் தேதி முதல் இ-பாஸ் முறையை அறிமுகம் செய்தது.

இதனால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வெகுவாக குறைந்தது. பொதுவாக மலர் கண்காட்சி நடக்கும் நாட்களில் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் வருவார்கள். இவர்களில் 90 சதவீதம் பேர் மலர் கண்காட்சியை காண பூங்காவிற்கு வருவார்கள். இதனால் பூங்கா முழுவதிலும் மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் இம்முறை இ-பாஸ் அறிமுகம் செய்யப்பட்டதால், சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தை காட்டிலும் குறைந்தே காணப்பட்டது.

The post ஊட்டியில் இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiris district ,Botanical Gardens ,Dinakaran ,
× RELATED ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில்...