×
Saravana Stores

மருந்துவாழ்மலையில் திடீர் தீ அரிய வகை மூலிகை செடிகள் எரிந்து நாசம்

கன்னியாகுமரி : கன்னியாகுமரி அருகே மருத்துவாழ்மலை அமைந்துள்ளது. இது ஏராளமான அரியவகை மூலிகைகள், மரங்கள், செடி-கொடிகள் மற்றும் பறவை, விலங்குகள் என உயிரினங்களின் கூடாரமாக உள்ளது. நேற்று முன்தினம் இந்த மலையின் அடிவாரத்தில் இருந்து சுமார் 600 அடி உயரத்தில் திடீரென தீப்பிடிக்க தொடங்கியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் சிறிதுநேரத்தில் சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

இதுகுறித்து அப்பகுதியினர் கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் சுரேஷ் சந்திரகாந்த் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினரும் அங்கு விரைந்து சென்று உதவினர். நீண்டநேர போராட்டத்துக்கு பிறகு இரவு சுமார் 10 மணியளவில் தீயை முற்றிலும் அணைத்தனர்.

இந்த தீவிபத்தில் மருந்துவாழ் மலையில் உள்ள ஏராளமான மரங்கள், அரியவகை மூலிகைகள் தீயில் எரிந்து நாசமாகியதாக கூறப்படுகிறது.தீவிபத்துக்கு என்ன காரணம் என தெரியவில்லை. கடும் வெயிலால் தீப்பிடித்திருக்கலாம் என வனத்துறையினர் கருதுகின்றனர்.

The post மருந்துவாழ்மலையில் திடீர் தீ அரிய வகை மூலிகை செடிகள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : Yasurajimmalai ,Kanyakumari ,Madhyajalmalai ,
× RELATED கன்னியாகுமரி கண்ணாடி பாலத்திற்கு பீம்கள் பொருத்தும் பணி தொடக்கம்