×

அரசு பள்ளி தொடர்ந்து 12வது ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி

தஞ்சாவூர், மே11:தஞ்சாவூரில் உள்ள பார்வைதிறன் குறையுடையோர் அரசு பள்ளி தொடர்ந்து 12-வது ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. தஞ்சாவூர் மேம்பாலம் அருகில் அரசு பார்வை திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 14 மாணவர்கள், 5 மாணவிகள் என 19 பேர் தேர்வு எழுதினர்.இதில் அனைவரும் வெற்றி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தொடர்ந்து 12ஆண்டாக இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி அடைந்து உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளிவந்த பிளஸ்2 பொதுத்தேர்வில் தொடர்ந்து 8வது ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.

The post அரசு பள்ளி தொடர்ந்து 12வது ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Public ,School for the Visually Impaired ,Thanjavur Development ,
× RELATED தஞ்சாவூர் மாநகர பகுதியில் டெங்கு...