×

பட்டுக்கோட்டை எஸ்.எஸ்.எம் ஜூவல்லரியில் அட்சய திருதியை கொண்டாட்டம்

பட்டுக்கோட்டை, மே11:தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சின்னையா தெருவில் 25 ஆண்டு கால மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையில் சீரோடும், சிறப்போடும் இயங்கிவரும் நிறுவனம் எஸ்.எஸ்.எம் ஜுவல்லரி. மின்னும் பொன்னில் பொங்கும் பேரழகு புத்தம் புது சுபமுகூர்த்த கலெக்சன்ஸ்மிக குறைந்த சேதாரம் 3 சதவீதம் முதல். பட்டுக்கோட்டையின் முதல் ஹால்மார்க் ஷோரூம் என்பது குறிப்பிடத்தக்கது. முழுமையான வெளிப்படைத் தன்மை, வாழ்நாள் பராமரிப்பு உத்திரவாதம், 100% ஹால்மார்க் தங்கம், பரிசோதிக்கப்பட்ட மற்றும் சான்றளிக்கப்பட்ட வைரங்கள், நியாயமான விலைக்கான கொள்கை, நியாயமான தொழிலாளர் நடைமுறைகள் என ஏராளமான சிறப்பம்சங்களோடு எஸ்.எஸ்.எம் ஜுவல்லரி 25 ஆண்டு கால மக்களின் நம்பிக்கையில் சிறப்பாக இயங்கி வருகிறது. ஆண்டுதோறும் முக்கிய நாட்களில் சிறப்பு விற்பனை நடைபெற்று வருவதும், இந்த சிறப்பு விற்பனை வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களின் அமோக ஆதரவை பெற்றுவருவதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 24 ஆண்டுகளை கடந்து பொதுமக்களின் அமோக ஆதரவோடு நம்பிக்கை, நாணயம், கைராசி இவை மூன்றையும் ஒரே தாரக மந்திரமாக கொண்டு 25ம் ஆண்டு வெள்ளி விழா ஆண்டில் எஸ்.எஸ்.எம் ஜுவல்லரி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையை பெற்ற எஸ்.எஸ்.எம் ஜுவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனையாக தங்கம் கிராமிற்கு ரூ. 100 தள்ளுபடி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.இது குறித்து எஸ்.எஸ்.எம். ஜுவல்லரி நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.ஜி.ராஜகோபால், இயக்குனர் ஜி.ஆர்.விஜய்சீனிவாஸ் ஆகியோர் கூறுகையில், தொடர்ந்து 25 ஆண்டுகளாக எங்கள் நிறுவனத்திற்கு ஆதரவு வழங்கிவரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும்மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். செல்வ வளம் கொடுக்கும் அட்சய திருதியை நாளில் உங்கள் எஸ்.எஸ்.எம் ஜுவல்லரிக்கு வந்து தரமான தங்கம் மற்றும் வெள்ளி வாங்கி பயனடைந்த வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றி. தொடர்ந்து தங்கள் நல்லாதரவை விரும்புகிறோம் என்றனர்.

The post பட்டுக்கோட்டை எஸ்.எஸ்.எம் ஜூவல்லரியில் அட்சய திருதியை கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Akshaya Trithithi ,SSM Jewellery ,Pattukottai ,Chinnaiya Street, Thanjavur District, Pattukottai ,SSM Jewelery ,Akshay Trithiya ,
× RELATED டூவீலரில் வந்து ஆட்டை கடத்தும் கும்பல்