×

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி

புதுக்கோட்டை, மே 11: புதுக்கோட்டை திருக்கோகர்ணத்திலுள்ள வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் இருந்து தேர்வெழுதிய 74 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். மாணவி யாழினி 500க்கு 497 மதிப்பெண்கள் எடுத்து சிறப்பிடம் பெற்றுள்ளார். இதேபோல, மாணவி சுஜிதா 494 மதிப்பெண்களும், துர்கா 491 மதிப்பெண்களும், மணிவாசன் 491 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி, ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி, நிர்வாக இயக்குநர் நிவேதிதா மூர்த்தி, இயக்குநர் காவியா மூர்த்தி ஆகியோர் பாராட்டினர்.
சமூக அறிவியல் பாடத்தில் துர்கா, மகா நிவேதிதா, சந்தோஷினி ஆகியோரும், ஆங்கில பாடத்தில் யாழினியும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 475 மதிப்பெண்ணுக்கு மேல் 23 மாணவர்களும், 450 மதிப்பெண்ணுக்கு மேல் 35 மாணவர்களும், 400 மதிப்பெண்ணுக்கு மேல் 56 மாணவர்களும் மதிப்பெண் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி, பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி, நிர்வாக இயக்குநர் நிவேதிதா மூர்த்தி, பள்ளி ஆலோசகர் நாகாஅதியன், பள்ளியின் இயக்குநர் சுதர்சன் பள்ளியின் சிஇஓ காவியாமூர்த்தி பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் அபிராம சுந்தரி, கௌரி, வரலெட்சுமி மற்றும் கோமதி ஆசிரியர்கள் பாராட்டினர் . மேலும் சமீபத்தில் வெளியான பிளஸ்-2 பொது தேர்வில் வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளின் படிப்பிற்காக பயன்படுத்துகிறோம்
இத்திட்டம் பற்றிய பயனாளிகளின் கருத்துக்கள்: தினசரி வேலைக்கு சென்று குடும்பத்தை நடந்த வருகிறோம். மேலும் குழந்தைகளின் படிப்பு தேவைக்காகவும், அன்றாடம் குடும்பசெலவுகளை மேற்கொள்வதற்கும் சிறு, சிறு செலவுகளுக்கு கூட சிரமமப்படும் நிலையில் இருந்தோம். இச்சூழ்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தப்படும் ‘கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ்” பயன்பெறுவதற்காக மனு வழங்கி இருந்தேன். அதன்படி இன்றையதினம் மாதந்தோறும் குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000/- வழங்கும் கலைஞர் மகளிர்உரிமைத் திட்டத்தின்கீழ் பயன்பெறுவதற்கான வங்கி பற்றுஅட்டைகள் (ATM card) வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் குடும்பத்தின் பொருளாதார அடிப்படையிலான சிறு, சிறு தேவைகளையும் குழந்தைகளின் படிப்பு செலவிற்கும் பயன்படுத்தி குடும்பத்தை சிறந்த முறையில் நிர்வாகம் செய்வதற்கு எங்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்”செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் என்றனர்.

The post பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Venkateswara Matriculation School ,Pudukottai ,Matric Higher Secondary School ,Pudukottai Thirukokarna ,SSLC ,Yashini ,
× RELATED 11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில்...