- தேனி நாடார் பள்ளிகள்
- பிறகு நான்
- இந்து நாடார் மெட்ரிகுலேஷன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
- மேலப்பேட்டை
- தேனி நாடார்
- தின மலர்
தேனி, மே 11: தேனி நகரில் உள்ள தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 170 மாணவ, மாணவியர் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். தேர்வுக்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதிய அனைவரும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் மாணவியர் சம்ரீத்தா மற்றும் கனீஷ்கா ஆகிய இரண்டு மாணவிகள் 500 க்கு 497 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும் பெற்றார். மாணவி ஜனனி 493 மதிப்பெண்களும், மாணவிகள் தேவி, ஹரினி, ரித்திகா மற்றும் மாணவர் திருகருனேஷ் பாண்டியன் ஆகிய 4 பேர் தலா 490 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவியர்களுக்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜ்மோகன் பாராட்டி பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் உறவின்முறை உப தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்த் வேல், பொருளாளர் பழனியப்பன், பள்ளி செயலாளர் நவமணி, இணைச் செயலாளர் அயன் மூர்த்தி, தீபக் கணேஷ், பள்ளி முதல்வர் பூர்ண செல்வி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களை வாழ்த்தினர்.
இதே போல, தேனி அருகே முத்து தேவன் பட்டியில் உள்ள தேனி மேல பட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர் கபில் 500 க்கு 497 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்தார். இதே பள்ளியைச் சேர்ந்த மாணவி அர்ச்சனா 495 மதிப்பெண்களையும், சந்தியா, தன்யா, ஹர்ஷினி ஆகிய மூவரும் 493 மதிப்பெண்களையும் பெற்று சாதனை படைத்தனர். இப்பள்ளியில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவ, மாணவியர்களை பாராட்டும் விதமாக நேற்று பள்ளி வளாகத்தில் விழா நடந்தது. இதில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜமோகன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
இவ்விழாவில் உறவின்முறை உப தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன், பள்ளி செயலாளர் பால சரவணகுமார், இணை செயலாளர் வன்னிய ராஜன், அருண்குமார், பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களை வாழ்த்தினர்.
The post 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேனி நாடார் பள்ளிகள் சாதனை appeared first on Dinakaran.