×

ராமநாதபுரம் மாவட்டத்தில் 64 அரசு பள்ளிகள் உட்பட 133 பள்ளிகள் 100% தேர்ச்சி: மாநிலத்தில் 3ம் இடம் பிடித்து சாதனை

ராமநாதபுரம். மே 11: ராமநாதபுரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 64 அரசு பள்ளிகள் உட்பட 133 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மேலும், மாவட்ட அளவில் 96.36 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 3ம் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை 7,761 மாணவர்கள், 7,931 மாணவிகள் என மொத்தம் 15,692 பேர் எழுதினர். நேற்று வெளியான தேர்வு முடிவுகளின் அடிப்படையில் 7,372 மாணவர்கள், 7,749 மாணவிகள் என மொத்தம் 15,121 பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட்ட அளவில் மாணவர்கள் 94.99 சதவீதம், மாணவிகள் 97.71 சதவீதம் என மொத்தம் 96.36 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது மாநில அளவில் 3வது இடம் ஆகும்.

மேலும் மாவட்டத்தில் உள்ள 138 அரசு பள்ளிகளில், 64 பள்ளிகளில் மாணவ, மாணவியர்கள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல் 49 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 17 பள்ளிகளும், 75 மெட்ரிக் பள்ளிகளில் 52 பள்ளி மாணவ, மாணவிகளும் 100 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர். இதன்படி மாவட்டத்தில் 133 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. 12ம் இடத்தில் இருந்து…: கடந்தாண்டு 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் 93.86 ஆக இருந்தது. இதன் அடிப்படையில் மாநில அளவில் 12வது இடம் பிடிந்திருந்தது. இந்நிலையில் தற்போது தேர்ச்சி சதவீதம் 96.36 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மாநில அளவில் 3 வது இடம் பிடித்துள்ளது. இதனை வரவேற்று முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post ராமநாதபுரம் மாவட்டத்தில் 64 அரசு பள்ளிகள் உட்பட 133 பள்ளிகள் 100% தேர்ச்சி: மாநிலத்தில் 3ம் இடம் பிடித்து சாதனை appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Ramanathapuram district ,Dinakaran ,
× RELATED மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த கோடை மழை: உழவு பணியை துவக்க அறிவுறுத்தல்