×

கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளிவருவது இந்தியா கூட்டணியை பலப்படுத்தியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

 

சென்னை: அரவிந்த் கெஜ்ரிவால் சிறையிலிருந்து வெளிவருவது நீதியை அடையாளப்படுத்துவதோடு, இந்தியா கூட்டணியையும் பலப்படுத்தியுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது: டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால பிணை அளித்துள்ள உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினை வரவேற்கிறேன்.

அநீதிக்கு எதிரான இந்த வெற்றி நமது மக்களாட்சியை வலிமைப்படுத்தியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் சிறையிலிருந்து வெளிவருவது நீதியை அடையாளப்படுத்துவதோடு இந்தியா கூட்டணியையும் பலப்படுத்தியுள்ளது. தேர்தலில் இந்தியா கூட்டணி பெரும் வெற்றி பெறும் வேகத்தை இது கூட்டியுள்ளது. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளிவருவது இந்தியா கூட்டணியை பலப்படுத்தியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,India ,Chief Minister ,M K Stalin ,Chennai ,Arvind Kejriwal ,M. K. Stalin ,DMK ,Tamil Nadu ,M.K.Stalin ,Delhi Chief Minister ,Aam Aadmi Party ,
× RELATED டெல்லி முதலமைச்சர் நீதிமன்ற காவல் நீட்டிப்பு