×

தென் சென்னை அதிமுக மாவட்ட செயலாளர் வேலைக்கார பெண்ணிடம் சில்மிஷம்

* பாதிக்கப்பட்ட பெண் தப்பி ஓட்டம்
* பஞ்சாயத்து ஆடியோ வெளியாகி பரபரப்பு

சென்னை: வேலைக்கார பெண்ணிடம் தென் சென்னை அதிமுக மாவட்ட செயலாளர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட பெண் சென்னையில் இருந்து தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுகவில் தென் சென்னை மாவட்ட செயலாளராக மூத்த நிர்வாகி உள்ளார். இவர் பெண்கள் விஷயத்தில் ஒரு மாதிரியான ஆள் என்று கூறப்படுகிறது. இதனால் இவரது வீட்டில் வேலைக்கு சேரும் பெண்கள் சில நாட்களில் ஓடிவிடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. அதில், திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு பெண் சமீபத்தில் அவரது வீட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார். சேர்ந்த அன்றே, பெண்ணிடம் சில்மிஷத்தில் மாவட்டச் செயலாளர் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து 2 நாட்கள் ஈடுபட்டதால் 3வது நாள் அந்த பெண் வீட்டில் இருந்து சொந்த ஊருக்கு தப்பி ஓடிவிட்டார்.

இது தெரியாமல் வீட்டில் இருந்து வெளியில் சென்ற பெண் திரும்பி வராததால் அந்த மாவட்டச் செயலாளர், பெண்ணின் செல்போனுக்கு தொடர்ந்து அழைத்துள்ளார். இதனால் கூடுதலாக பயந்துபோன பெண், போன் இணைப்பை துண்டித்து விட்டார். அதேநேரத்தில் பயந்துபோன மாவட்டச் செயலாளரோ, வேலைக்கார பெண்ணை அழைத்து வந்த அதிமுக நிர்வாகியிடம் போன் செய்து, வேலைக்கார பெண் ஓடியது குறித்து தெரிவித்துள்ளார். மேலும் வீட்டில் நடந்த சில்மிஷ விஷயத்தையும் சொல்லி, பிரச்னையை முடிக்க வேண்டும். வேலைக்கார பெண்ணை சென்னைக்கு அழைத்து வரும்படி கூறியுள்ளார். அந்த நிர்வாகியோ, மற்றொரு பெண் நிர்வாகியிடம் போன் செய்து, வேலைக்கார பெண்ணை அழைத்துவரும்படி கூறியதோடு, அதிமுக மாவட்டச் செயலாளர் பெண்கள் விஷயத்தில் எவ்வளவு வீக் என்பதையும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த ஆடியோக்கள் தற்போது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த ஆடியோவில் ஒரு ஆண் நிர்வாகி, மற்றொரு பெண் நிர்வாகியிடம் பேசும்போது, மாவட்டச் செயலாளர் குறித்தும், அவர் பெண்கள் விஷயத்தில் ஒரு மாதிரியான ஆள் என்று கூறுவதுபோன்ற ஆடியோவும் வெளியாகியுள்ளன. மற்றொரு ஆடியோவில் பெண் நிர்வாகியிடம் பேசும் மாவட்டச் செயலாளர், தான் வசிக்கும் பகுதியின் இன்ஸ்பெக்டரை வரவழைத்து, வேலைக்கார பெண் வந்ததும், பேசி சரி செய்யலாம் என்று சமாதானம் பேசும் ஆடியோவும் வெளியாகியுள்ளது. இந்த ஆடியோக்கள் அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தென் சென்னை அதிமுக மாவட்ட செயலாளர் வேலைக்கார பெண்ணிடம் சில்மிஷம் appeared first on Dinakaran.

Tags : Smilmish ,Assistant Secretary ,South Chennai Adimuka District ,Panchayathu ,Chennai ,South Chennai district ,Silmish ,Velikara Pena ,
× RELATED 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!