- சென்னை
- தமிழ்நாடு காங்கிரஸ்
- ஜனாதிபதி
- செல்வப்பெருந்தகாய்
- சத்தியமூர்த்தி பவன்
- தமிழ்நாடு அரசு
- முதல் அமைச்சர்
- காமராஜ் நினைவு
- செல்வாப்பேருந்தாள்
சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: காமராஜர் நினைவிடம் சீரமைக்கும் பணியை தொடங்கியுள்ள, தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். குறை சொல்கிறார்கள், குற்றம் சொல்கிறார்கள் என்று பார்க்காமல் உடனடியாக முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். தேர்தல் தோல்வி பயத்தால் பாஜவினர் ராமர் கோயிலை, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மூடிவிடும் என பேசி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி ராமரையும் வணங்கும், பாபரையும் வணங்கும்.
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணத்தில் காவல்துறை புலன் விசாரணை சரியாக சென்று கொண்டு இருக்கிறது. காவல்துறைக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், பொதுச்செயலாளர்கள் எஸ்.ஏ.வாசு, பி.வி.தமிழ்ச்செல்வன், மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம், இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு ஆகியோர் உடனிருந்தனர்.
The post செல்வப்பெருந்தகை பேட்டி: தோல்வி பயத்தால் பாஜவினர் உளறல் appeared first on Dinakaran.