×

மாவட்ட வாரியாக தேர்ச்சி விவரம்…

 


சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வில் மாவட்ட வாரியாக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று முதல் 3 இடங்களை பெற்ற மாவட்டங்களின் விவரம் வருமாறு:

* அரியலூர் மாவட்டத்தில் 9565 மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். இவர்களில் 9308 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது. மொத்த தேர்ச்சி வீதம் 97.31%.
* சிவகங்கை மாவட்டத்தில் 17 ஆயிரத்து 707 மாணவ, மாணவியர் தேர்வில் பங்கேற்று, 17 ஆயிரத்து 179 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த மாவட்டம் மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மொத்த தேர்ச்சி வீதம் 97.02%.
* ராமநாதபுரம் மாவட்டத்தின் மூலம் 15 ஆயிரத்து 692 பேர் தேர்வு எழுதி, 15 ஆயிரத்து 121 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த மாவட்டம் மாநிலத்தில் 3ம் இடம் பிடித்துள்ளது. மொத்த தேர்ச்சி வீதம் 96.36%.
* சென்னை மாவட்டத்தில் இருந்து 66 ஆயிரத்து 228 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 58 ஆயிரத்து 419 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 88.21%.

* காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 785 பேர் தேர்வு எழுதியதில் 13 ஆயிரத்து 819 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 87.55%.
* செங்கல்பட்டு மாவட்டத்தில் 31 ஆயிரத்து 916 பேர் எழுதினர். 27 ஆயிரத்து 889 பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 87.38%.
* திருவள்ளூர் மாவட்டத்தில் 32 ஆயிரத்து 511 பேர் எழுதினர். இவர்களில் 28 ஆயிரத்து 129 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 86.52%.
* காரைக்கால் பகுதியில் இருந்து 2450 பேர் தேர்வு எழுதியதில் 1916 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 78.20 சதவீதம்.
* புதுச்சேரியை சேர்ந்த பள்ளிகளில் இருந்து 12 ஆயிரத்து 502 பேர் தேர்வு எழுதியதில் 11 ஆயிரத்து 412 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 91.28 %.

The post மாவட்ட வாரியாக தேர்ச்சி விவரம்… appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Ariyalur district ,Dinakaran ,
× RELATED டெங்கு காய்ச்சல் தடுப்பு...