×

மாணவர்களாகிய உங்களுக்கு கல்வி எனும் அறிவாயுதம் துணையாக அமையட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


சென்னை: 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘கல்வி எனும் அறிவாயுதம் துணையாக அமையட்டும்’ என டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டிவிட்டரில் கூறியிருப்பதாவது: மேல்நிலை கல்விக்கு நுழைவு வாயிலாய் அமையும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள். மாணவச் செல்வங்களே, உங்களது எதிர்காலத்தை திட்டமிட்டு வடிவமைத்துக் கொள்வதற்கான அடித்தளத்தை வலிமையாக அமைத்து கொள்ளுங்கள். குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மேலும், மேல்நிலை கல்வி, தொழிற்கல்வி என பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. உங்களது பாதைக்கு வழிகாட்ட ‘‘நான் முதல்வன்’’ உள்ளிட்ட நமது அரசின் திட்டங்கள் உள்ளன. கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு என்றும் துணையாக அமையட்டும்.இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

The post மாணவர்களாகிய உங்களுக்கு கல்வி எனும் அறிவாயுதம் துணையாக அமையட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Principal ,K. ,Stalin ,Chennai ,M.O. K. Stalin ,Twitter ,Mu. K. Stalin ,
× RELATED கோடை விடுமுறை முடிந்து பள்ளி...