×

புதுச்சேரி, காரைக்காலில் 10ம் வகுப்பு தேர்வில் 89.14% பேர் தேர்ச்சி


புதுச்சேரி: புதுவை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கடந்த மார்ச், ஏப்ரலில் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள 289 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் – 7,590, மாணவிகள் – 7,362 என மொத்தம் 14,952 பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் – 6,527, மாணவிகள் 6,801 என மொத்தம் 13,328 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விழுக்காடு 89.14 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 0.02 சதவீதம் அதிகரித்துள்ளது. மாணவர்கள் 85.99 சதவீதமும், மாணவிகள் 92.38 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் இந்தாண்டும் மாணவர்களை காட்டிலும் மாணவிகள் 6.39 சதவீதம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள 108 அரசு பள்ளிகளில் ஆண்கள் – 2,924, பெண்கள் – 3,099 என 6,023 பேர் தேர்வு எழுதினர். இதில் ஆண்கள் – 2,086, பெண்கள் – 4,703 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுவை பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள் 81.69 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இது கடந்தாண்டை விட 0.14 சதவீதம் குறைவாகும். காரைக்காலில் உள்ள அரசு பள்ளிகள் 65.31 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இது கடந்தாண்டை காட்டிலும் 2.75 சதவீதம் குறைவு. மொத்தமாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள 108 அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 78.08 சதவீதம் ஆகும். கடந்தாண்டை விட 0.84 சதவீதம் குறைந்துள்ளது.

The post புதுச்சேரி, காரைக்காலில் 10ம் வகுப்பு தேர்வில் 89.14% பேர் தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Karaikal, Puducherry ,Puducherry ,Education Department of Puducherry ,Karaikal ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை