×

இளம்பெண் குளிப்பதை ரகசிய வீடியோ எடுத்த பாஜ நிர்வாகி


நாகர்கோவில்: குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் விமலன் (45). தோவாளை கிழக்கு ஒன்றிய பாஜ சிறுபான்மை பிரிவு நிர்வாகியாக உள்ளார். சம்பவத்தன்று இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வீட்டில் குளிப்பதை ரகசியமாக செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்து இளம்பெண் கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு இளம்பெண்ணின் கணவர் மற்றும் வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் விமலன் தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே விமலன் தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகிறார்கள். அவர் சென்னை அல்லது கேரளாவுக்கு சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post இளம்பெண் குளிப்பதை ரகசிய வீடியோ எடுத்த பாஜ நிர்வாகி appeared first on Dinakaran.

Tags : BJP ,Nagercoil ,Aralvaimozhi Mission Compound ,Kumari District ,Thovala ,Eastern Union BJP ,
× RELATED சட்டமன்ற தேர்தலில் பலத்தை காட்டுவோம்...