×

494 மதிப்பெண் பெற்ற மலை கிராம மாணவி

தேன்கனிக்கோட்டை, மே 11: தேன்கனிக்கோட்டை அருகே 10ம் வகுப்பு தேர்வில், மலை கிராம மாணவி பிரியதர்ஷினி 494 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அரசஜ்ஜூர் மலை கிராமத்தில் வசித்து வருபவர் வஜ்ரவேல். இவர் தேன்கனிக்கோட்டையில் டூவீலர் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் பிரியதர்ஷினி. தேன்கனிக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த இவர், அரசு பொதுத்தேர்வில் 500க்கு 494 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். பாடவாரியாக தமிழில் 98, ஆங்கிலத்தில் 98, கணித பாடத்தில் 100, அறிவியலில் 99, சமூக அறிவியலில் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும் அளித்து ஊக்கத்தால் 494 மதிப்பெண்கள் பெற முடிந்தது எனவும், டாக்டருக்கு படிக்க விரும்புவதாகவும் பிரியதர்ஷினி தெரிவித்தார்.

The post 494 மதிப்பெண் பெற்ற மலை கிராம மாணவி appeared first on Dinakaran.

Tags : Hill ,Dhenkanikottai ,Priyadarshini ,Vajravel ,Arasajur hill ,Dhenkanikottai, Krishnagiri district ,
× RELATED காட்டு யானை தாக்கியதில் விவசாயி சாவு