×

அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை

நல்லம்பள்ளி, மே 11: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள், 10ம் வகுப்பு தேர்வில் ரத்னாதேவி 500க்கு 493ம், வர்ணப்பிரியா 477ம், மாணவர் கணேஷ்குமார் 476 மதிப்பெண்களும் பெற்று, பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர். இவர்களுக்கு பாராட்டு விழா, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நேற்று நடந்தது. இதில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் துரைசாமி கலந்து கொண்டு, 3 பேருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் முத்துவேல், முன்னாள் மாணவர் மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Tags : Nallampalli ,Palayamputur Government Secondary School ,Dharmapuri District ,Ratnadevi 500 ,Varnapiriya ,Ganesh Kumar ,
× RELATED மாணவர் சேர்க்கைக்கு 31 வரை கால அவகாசம்