×

மின்சாரம் தாக்கி தம்பதி பலி மதுரையில் சோகம்

மதுரை, மே 11: மதுரையில் மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை டிவிஎஸ் நகர் துரைசாமி சாலையை சேர்ந்தவர் முருகேசன்(50). இவரது மனைவி பாப்பாத்தி (44). தம்பதி அதே பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வந்தனர். நேற்று இரவு வழக்கம்போல் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வழியில் மழையால் சாலையில் உயரழுத்த மின்கம்பி அறுந்து கீழே விழுந்து கிடந்துள்ளது. அதை கவனிக்காமல் சென்ற முருகேசன் டூவீலரை மின்கம்பியின் மீது ஏற்றியுள்ளார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு முருகேசன், பாப்பாத்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த சுப்பிரமணிய போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மின்சாரம் தாக்கி தம்பதி பலி மதுரையில் சோகம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Murugesan ,Duraisamy Road, TVS Nagar, Madurai ,Papathi ,
× RELATED மல்லிகையில் மகசூல் பெறும் வழிகள்