- KKR இருந்தது
- மும்பை
- கொல்கத்தா
- ஐபிஎல்
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
- மும்பை இந்தியர்கள்
- ஈடன் கார்டன்ஸ், கொல்கட்டா
கொல்கத்தா: ஐபிஎல் தொடரின் 60வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. ஈடன் கார்டனில் நடைபெற உள்ள இபோட்டியில், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள கொல்கத்தா அணியுடன் பிளே ஆப் சுற்று வாய்ப்பை பறிகொடுத்துவிட்ட மும்பை இந்தியன்ஸ் சம்பிரதாயமான பலப்பரீட்சை நடத்துகிறது. கேகேஆர் இதுவரை விளையாடி உள்ள 11 ஆட்டங்களில் 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்றுள்ளது. அடுத்து மும்பை, குஜராத், ராஜஸ்தான் அணிகளை சந்திக்க வேண்டியுள்ளது. கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யரின் ஆட்டம் வழக்கம் போல் இல்லை என்றாலும், அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றுள்ளார்.
சொந்தக் களத்தில் ஆடுவது மற்றும் நடப்புத் தொடரில் ஏற்கனவே மும்பையை வீழ்த்தியுள்ளது கொல்கத்தா அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். அதே சமயம், புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து விட்டது. அந்த அணி 12 ஆட்டங்களில் 4 வெற்றி, 8 தோல்வியுடன் 8 புள்ளிகள் மட்டுமே பெற்று பட்டியலில் 8வது இடத்தில் இருக்கிறது. எஞ்சிய 2 ஆட்டங்களில் இன்று வலுவான கொல்கத்தா, அடுத்து லக்னோவை சந்திக்கிறது. மும்பை அணி ஆறுதல் வெற்றிக்காகவும், கொல்தத்தா முதல் இடத்தை தக்கவைத்துக் கொள்ளவும் வரிந்துகட்டுவதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி. குறிப்பாக, சூரியகுமார் யாதவின் அதிரடி ஆட்டத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
The post முதலிடத்தை தொடருமா கேகேஆர்: மூட்டை கட்டிய மும்பையுடன் மோதல் appeared first on Dinakaran.